“வன்னியர்” ஜாதி என்கிற ஆவணமுடைய செய்தியை நண்பர் Velmurugan V செய்த பதிவு

வன்னிய ஜாதி,விஷ்ணு மதம் ...கிபி1914 ஆயிரங்காணி ஆளவந்தார் நாயகர் உயில் .

கோயிலுக்கு தன் வீட்டை தானம் செய்த கல்வெட்டு, வன்னியர் குலம் மகரிஷி கோத்திரம் ..கிபி1906(ஆவணம் இதழ் 18,பக்கம் 116)

அக்னி குல ஷத்ரியர்கள் கோயில் கட்டியதைப் பற்றி குறிப்பிடும் கல்வெட்டு (கிபி 1891,காஞ்சிபுரம் மாவட்ட கல்வெட்டுகள், தொடர் எண் 619/2013)

கி.பி.1755, செஞ்சி சிங்கவரம் கல்வெட்டு "வங்கார வன்னிய குல மன்னப்பன்" கட்டிய மண்டபம்...

வன்னிய குலத்தாருக்கு தலைக்கட்டுக்கு ஒன்னே கால் ரூபாய் செங்குந்த முதலியார்கள் வரிகொடுத்தது....அலைவாய்மலைச் செப்பேடு.(கொங்கு நாட்டு சமுதாய ஆவணங்கள்)

வன்னிய சாதியார் தலைக்கட்டுக்கு ...மல்லிக் குந்தம் செப்பு பட்டயம் .தேனோலை 6

வன்னிய ஜாதி, செஞ்சி சமஸ்தானம் உடையார் பாளையக்காரர்..கிபி 1734(தமிழக அரசு ஓலைச்சுவடி நூலகம், chidhambaram kaifyat and kaifyats)

சிறிங்கபட்டம் கல்வெட்டு.சாதி வன்னியன்,தர்மராஜா கோயில் பூசாரி.கிபி 1700(epigraphia carnatica,volume 16,page 211)

பிரம்ம வன்னியர் சிங்கக்கொடி தலைவரான முத்து விசயரங்கப்ப காலாட்கள் தோழ உடையார் ..... (Sii.vol.5/no 431,page 174)

அங்காள பரமேஸ்வரி கோயிலுக்கு வன்னிய குலம் குட்டியணன் கருப்பண்ணன், ஆறுமுக முதலியார்,சண்முக முதலியார் சுப்பிரமணியன் செட்டியார் போன்றோர் வரி கொடுத்தது... ..நாரணபுரம் செப்பேடு.(கொங்கு நாட்டு சமுதாய ஆவணங்கள்)

வன்னியர் குலத்தார் வரி கொடுத்தது .....மோரூர் காங்கேயர் ஏடு.தேனோலை 23.

படைபத்து வன்னிய கோத்திரம் படையாட்சிகள் ...ஈரோடு மாவட்ட சீனாபுரம் செப்புப் பட்டயம் .

கிபி 1766...இடங்கைத் தலைவரான வன்னிய நாட்டாருக்கு நகரத்தார்களும் கம்மாளர்களும் எழுதிக் கொடுத்த பட்டைய சாசனம். ..இடங்கை வலங்கை புராணம்.

தென்காசி செப்பேடு, பள்ளிகள் , படையாட்சிகள், அக்னி குலத்தோர்,வன்னிய தலைவர்கள் .four copper plates of tenkasi,

கேரள அரசு பள்ளி வில்லி படையாண்டவர் ஆவணம்... வன்னி குலத்து வன்னியர், அக்னி குலத்தோர்,வன்னிய குலத்தோர் என்கிறது.NO 6242.

சகல ஜாதிக்கு மடமும் நந்தவனமும் தர்மமும் நடந்து வருகிறபடியினாலே நம்முடைய மரபு வன்னியர் வீரபன்னாடர் வம்சம் விளங்க வேண்டுமென்று ..விருத்தாசலம் வன்னியர் மடாலய தர்மசாஸ்தனப் பட்டயம் .

சைவ எல்லப்ப நாவலர் 16ம் நூற்றாண்டு ..அருணாச்சலப் புராணம் ..
வல்லாள மகாராஜா,அங்கிகுலம்,வன்னிகுலம் , அனல்குலம் என்று குறிப்பிடப்படுகிறார்.

கம்பரின் சிலை எழுபது கிபி 11ம் நூற்றாண்டு ..
.வேள்விக்குச்சிறந்த வன்னி உதிகுலத்தோர் .
.வன்னி இறைக்குலத்தில் உதித்தவர்.
.வன்னியரசர் சமூகம் தானே .
.சம்பு கோத்திரத்தார்.
.பன்னாட்டார்

அகத்திய முனிவரின் அக்னி குண்டத்திலிருந்து வன்னிய வம்சம் தோன்றியதாகவும் அவர்கள் சத்திரியர்கள் என்றும் கூறுகிறது. (சாளுக்கியர் செப்பேடு கி.பி 12 ,inscriptions of nanded district,page 174)

வலங்கை98 இடங்கை98 ஜாதியை சேர்ந்தவர்கள் வன்னியர், வெள்ளாளர், பிராமணர்களுக்கு எதிராக ஒன்று கூடியதை குறிப்பிடும் கல்வெட்டு ..sii.vol.xxviii/no34,AR NO.34 of 1913 ,கிபி 14.

வன்னியர் குல காலன்
மன்னியர் குல காலன்
என்று தங்கள் மெய் கீர்த்திகளில் சொல்லிக் கொண்ட விஜயநகர அரசர்கள் கல்வெட்டுகள் .... தென்னிந்திய கோயில் சாசனங்கள் பகுதி 2...சாசனம் 550,சாசனம் 554.

சம்புவராய மன்னரை வன்னியனான அம்மையப்பன் என்கிறது இக்கல்வெட்டு (Sii.vol.xvii/no 205)..வன்னிய தலைவன் , வன்னிய மக்கள் தலைவன்,குடிப்பள்ளி,பள்ளி, சம்புகுல சக்கரவர்த்தி என்றும் அழைத்துக் கொண்டார்கள்.

வன்னியரில் சோழியவரையன்..திருத்துறைப்பூண்டி கல்வெட்டு.கிபி 12ம் நூற்றாண்டு

வன்னியரில் மாவலிவாணதிராயர் மக்களில் காலிங்கராயர் ...புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள்.

.மதுரையில் அரசாலும் சுந்தரபாண்டியன் வன்னியர் சாதியின் கதையை கேட்க நானும் மனமகிழ்ந்து பாடினேன் ..வன்னிய புராணம் 16,17வது பாடல்கள்.

சுலோகம் 41 ..தொண்டை மண்டல சம்புவராயர்களை போரில் வென்றிடுவீராக.
சுலோகம் 42 ..அதன் பிறகு குறுநில மன்னர்களான வன்னியர்களை உம்முடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தால் துலுக்கர் ஆட்சியை அகற்றலாம்.
சுலோகம் 28 ..வீர கம்பன்னனின் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள் கேரள மக்களின் மூச்சுக்காற்றையும், வன்னிய. மன்னர்களின் நாட்டை நாசம் செய்த ட.தீயைபோலவும் ,ஆந்திர. நாட்டை தகிக்கும் சூரியன் போலவும் காணப்பட்டன ...கங்கா தேவி எழுதிய மதுரா விஜயம்

வன்னிய குல குன்னத்தூர் மழவராயர் பெண்ணாடம் கடந்தையார் . ,1511கிபி,தெ.இ.கோ.சா பாகம் 3 பகுதி 1,page 1263)

வன்னியராய கோத்திர ஆண்டியப்பன் நாயக்கன் மகன் முத்துநாயக்கனின் காணியாட்சி கிராமமான வெள்ளோடையின் பாதி நிலத்தை வைசிய ஜாதியினருக்கு எழுதி கொடுத்தது (கிபி 1416,தெ.இ.கோ.சா பாகம்3,பகுதி2

சமையகுமாரர் வன்னிய திம்மு நாயக்கர் ,வன்னிய நாட்டு நாயகஞ் செய்வார் .....ARIEp-1978 B:NO:278

சொக்கலிங்கம் சங்கரன் என்கிற வன்னியர் .தெ.கோ.சாசனம்.1105 பாகம்3,பகுதி 1,விஜயநகர அரசர் காலம்

சோழமண்டலத்தில் உள்ள பூமி பாலகரும்(வெள்ளாளர்) , வாதாபி திறை கொண்ட வன்னியரும்(வன்னிய ஜாதியினர்) ( கிபி 16 ,,தமிழக செப்பேடுகள் தொகுதி1,பக்கம் 157)

கிபி 16 ,நெய்வேலி செப்பேடு)
சம்பு முனிவர் யாகத்தில் வன்னியர் வம்சம் தோன்றியது என்றும்.
நீலகங்கன் வம்சத்திலே வந்த பள்ளிகள்
கிருஷ்ண வன்னியர்கள் என்றும்
வஜ்ரபாகன் வம்சத்தில் வந்த பள்ளிகள் சம்பு வன்னியர் என்றும் கங்கப் பரிபாலன் வம்சத்திலே வந்த சிஷ்ட பள்ளிகள் பிரம்ம வன்னியர் என்றும்
சம்பு குல வேந்தன் வம்சத்திலே வந்த
வன்னிய பள்ளிகள் கங்க வன்னியர்கள் என்றும்
பரசுராமன் வம்சத்திலேயே வந்த அரச பள்ளிகள்
இந்திர வன்னியர் என்றும் கூறுகிறது .

வையாப் பாடல் .
வன்னிய குலத்தோர் .....................பாடல்21
இங்கிருக்கும் வன்னியர் சாதி ...பாடல்50
வன்னியமார்கள் அனைவரும் கூடி. பாடல்51

தேசத்தில் உள்ள வன்னியரும், கள்ளர்,வில்லிகள், பட்டர்கள் .hijira inscription கிபி 1580

பாண்டிய மன்னனின் பெரும் படையினராக வன்னிய வட்டம், தெலுங்கர்,ஆரியர் ,கள்ளர் ,மறவர் (தெ.இ.கோ.சா 706)

வன்னிய நாயக்கமாரில். கிபி 1379.(ஆவணம் இதழ் 18,page 65)

வன்னிய நாயக்கர்கள் கோயிலுக்கு செய்த கொடை பற்றியது. கிபி 1379.(ஆவணம் இதழ் 12,page 7).அதாவது வன்னிய ஜாதியில் நாயக்கர் பட்டம் உடையவர்களை பற்றிய கல்வெட்டு

இறைவனின் ஸ்ரீ பாதம் தாங்கும் உரிமையை வன்னியர்களுக்கு அரசன்அளித்ததை கூறும் கல்வெட்டு. கிபி 1382.(புதுச்சேரி மாநில கல்வெட்டுக்கள,page 353)

வன்னியர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் ஜாதியில் ஏழு பேரை தேர்ந்தெடுத்து ஏழு நாட்டுக்கு தலைவர் ஆக்கினர். அந்த நாடே வன்னிய நாடு. ....யாழ்ப்பாண வைபவமாலை