Tuesday, January 13, 2026

வன்னிய ஜாதி,விஷ்ணு மதம்

 “வன்னியர்” ஜாதி என்கிற ஆவணமுடைய செய்தியை நண்பர் Velmurugan V செய்த பதிவு

🔴வன்னிய ஜாதி,விஷ்ணு மதம் ...கிபி1914 ஆயிரங்காணி ஆளவந்தார் நாயகர் உயில் .
🔴கோயிலுக்கு தன் வீட்டை தானம் செய்த கல்வெட்டு, வன்னியர் குலம் மகரிஷி கோத்திரம் ..கிபி1906(ஆவணம் இதழ் 18,பக்கம் 116)
🔴அக்னி குல ஷத்ரியர்கள் கோயில் கட்டியதைப் பற்றி குறிப்பிடும் கல்வெட்டு (கிபி 1891,காஞ்சிபுரம் மாவட்ட கல்வெட்டுகள், தொடர் எண் 619/2013)
🔴கி.பி.1755, செஞ்சி சிங்கவரம் கல்வெட்டு "வங்கார வன்னிய குல மன்னப்பன்" கட்டிய மண்டபம்...
🔴வன்னிய குலத்தாருக்கு தலைக்கட்டுக்கு ஒன்னே கால் ரூபாய் செங்குந்த முதலியார்கள் வரிகொடுத்தது....அலைவாய்மலைச் செப்பேடு.(கொங்கு நாட்டு சமுதாய ஆவணங்கள்)
🔴வன்னிய சாதியார் தலைக்கட்டுக்கு ...மல்லிக் குந்தம் செப்பு பட்டயம் .தேனோலை 6
🔴வன்னிய ஜாதி, செஞ்சி சமஸ்தானம் உடையார் பாளையக்காரர்..கிபி 1734(தமிழக அரசு ஓலைச்சுவடி நூலகம், chidhambaram kaifyat and kaifyats)
🔴 சிறிங்கபட்டம் கல்வெட்டு.சாதி வன்னியன்,தர்மராஜா கோயில் பூசாரி.கிபி 1700(epigraphia carnatica,volume 16,page 211)
🔴பிரம்ம வன்னியர் சிங்கக்கொடி தலைவரான முத்து விசயரங்கப்ப காலாட்கள் தோழ உடையார் ..... (Sii.vol.5/no 431,page 174)
🔴அங்காள பரமேஸ்வரி கோயிலுக்கு வன்னிய குலம் குட்டியணன் கருப்பண்ணன், ஆறுமுக முதலியார்,சண்முக முதலியார் சுப்பிரமணியன் செட்டியார் போன்றோர் வரி கொடுத்தது... ..நாரணபுரம் செப்பேடு.(கொங்கு நாட்டு சமுதாய ஆவணங்கள்)
🔴வன்னியர் குலத்தார் வரி கொடுத்தது .....மோரூர் காங்கேயர் ஏடு.தேனோலை 23.
🔴படைபத்து வன்னிய கோத்திரம் படையாட்சிகள் ...ஈரோடு மாவட்ட சீனாபுரம் செப்புப் பட்டயம் .
🔴கிபி 1766...இடங்கைத் தலைவரான வன்னிய நாட்டாருக்கு நகரத்தார்களும் கம்மாளர்களும் எழுதிக் கொடுத்த பட்டைய சாசனம். ..இடங்கை வலங்கை புராணம்.
🔴தென்காசி செப்பேடு, பள்ளிகள் , படையாட்சிகள், அக்னி குலத்தோர்,வன்னிய தலைவர்கள் .four copper plates of tenkasi,
🔴கேரள அரசு பள்ளி வில்லி படையாண்டவர் ஆவணம்... வன்னி குலத்து வன்னியர், அக்னி குலத்தோர்,வன்னிய குலத்தோர் என்கிறது.NO 6242.
🔴சகல ஜாதிக்கு மடமும் நந்தவனமும் தர்மமும் நடந்து வருகிறபடியினாலே நம்முடைய மரபு வன்னியர் வீரபன்னாடர் வம்சம் விளங்க வேண்டுமென்று ..விருத்தாசலம் வன்னியர் மடாலய தர்மசாஸ்தனப் பட்டயம் .
🔴சைவ எல்லப்ப நாவலர் 16ம் நூற்றாண்டு ..அருணாச்சலப் புராணம் ..
வல்லாள மகாராஜா,அங்கிகுலம்,வன்னிகுலம் , அனல்குலம் என்று குறிப்பிடப்படுகிறார்.
🔴கம்பரின் சிலை எழுபது கிபி 11ம் நூற்றாண்டு ..
.வேள்விக்குச்சிறந்த வன்னி உதிகுலத்தோர் .
.வன்னி இறைக்குலத்தில் உதித்தவர்.
.வன்னியரசர் சமூகம் தானே .
.சம்பு கோத்திரத்தார்.
.பன்னாட்டார்
🔴அகத்திய முனிவரின் அக்னி குண்டத்திலிருந்து வன்னிய வம்சம் தோன்றியதாகவும் அவர்கள் சத்திரியர்கள் என்றும் கூறுகிறது. (சாளுக்கியர் செப்பேடு கி.பி 12 ,inscriptions of nanded district,page 174)
🔴வலங்கை98 இடங்கை98 ஜாதியை சேர்ந்தவர்கள் வன்னியர், வெள்ளாளர், பிராமணர்களுக்கு எதிராக ஒன்று கூடியதை குறிப்பிடும் கல்வெட்டு ..sii.vol.xxviii/no34,AR NO.34 of 1913 ,கிபி 14.
🔴வன்னியர் குல காலன்
மன்னியர் குல காலன்
என்று தங்கள் மெய் கீர்த்திகளில் சொல்லிக் கொண்ட விஜயநகர அரசர்கள் கல்வெட்டுகள் .... தென்னிந்திய கோயில் சாசனங்கள் பகுதி 2...சாசனம் 550,சாசனம் 554.
🔴சம்புவராய மன்னரை வன்னியனான அம்மையப்பன் என்கிறது இக்கல்வெட்டு (Sii.vol.xvii/no 205)..வன்னிய தலைவன் , வன்னிய மக்கள் தலைவன்,குடிப்பள்ளி,பள்ளி, சம்புகுல சக்கரவர்த்தி என்றும் அழைத்துக் கொண்டார்கள்.
🔴வன்னியரில் சோழியவரையன்..திருத்துறைப்பூண்டி கல்வெட்டு.கிபி 12ம் நூற்றாண்டு
🔴வன்னியரில் மாவலிவாணதிராயர் மக்களில் காலிங்கராயர் ...புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள்.
🔴.மதுரையில் அரசாலும் சுந்தரபாண்டியன் வன்னியர் சாதியின் கதையை கேட்க நானும் மனமகிழ்ந்து பாடினேன் ..வன்னிய புராணம் 16,17வது பாடல்கள்.
🔴சுலோகம் 41 ..தொண்டை மண்டல சம்புவராயர்களை போரில் வென்றிடுவீராக.
சுலோகம் 42 ..அதன் பிறகு குறுநில மன்னர்களான வன்னியர்களை உம்முடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தால் துலுக்கர் ஆட்சியை அகற்றலாம்.
சுலோகம் 28 ..வீர கம்பன்னனின் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள் கேரள மக்களின் மூச்சுக்காற்றையும், வன்னிய. மன்னர்களின் நாட்டை நாசம் செய்த ட.தீயைபோலவும் ,ஆந்திர. நாட்டை தகிக்கும் சூரியன் போலவும் காணப்பட்டன ...கங்கா தேவி எழுதிய மதுரா விஜயம்
🔴வன்னிய குல குன்னத்தூர் மழவராயர் பெண்ணாடம் கடந்தையார் . ,1511கிபி,தெ.இ.கோ.சா பாகம் 3 பகுதி 1,page 1263)
🔴வன்னியராய கோத்திர ஆண்டியப்பன் நாயக்கன் மகன் முத்துநாயக்கனின் காணியாட்சி கிராமமான வெள்ளோடையின் பாதி நிலத்தை வைசிய ஜாதியினருக்கு எழுதி கொடுத்தது (கிபி 1416,தெ.இ.கோ.சா பாகம்3,பகுதி2
🔴சமையகுமாரர் வன்னிய திம்மு நாயக்கர் ,வன்னிய நாட்டு நாயகஞ் செய்வார் .....ARIEp-1978 B:NO:278
🔴சொக்கலிங்கம் சங்கரன் என்கிற வன்னியர் .தெ.கோ.சாசனம்.1105 பாகம்3,பகுதி 1,விஜயநகர அரசர் காலம்
🔴சோழமண்டலத்தில் உள்ள பூமி பாலகரும்(வெள்ளாளர்) , வாதாபி திறை கொண்ட வன்னியரும்(வன்னிய ஜாதியினர்) ( கிபி 16 ,,தமிழக செப்பேடுகள் தொகுதி1,பக்கம் 157)
🔴கிபி 16 ,நெய்வேலி செப்பேடு)
சம்பு முனிவர் யாகத்தில் வன்னியர் வம்சம் தோன்றியது என்றும்.
நீலகங்கன் வம்சத்திலே வந்த பள்ளிகள்
கிருஷ்ண வன்னியர்கள் என்றும்
வஜ்ரபாகன் வம்சத்தில் வந்த பள்ளிகள் சம்பு வன்னியர் என்றும் கங்கப் பரிபாலன் வம்சத்திலே வந்த சிஷ்ட பள்ளிகள் பிரம்ம வன்னியர் என்றும்
சம்பு குல வேந்தன் வம்சத்திலே வந்த
வன்னிய பள்ளிகள் கங்க வன்னியர்கள் என்றும்
பரசுராமன் வம்சத்திலேயே வந்த அரச பள்ளிகள்
இந்திர வன்னியர் என்றும் கூறுகிறது .
🔴வையாப் பாடல் .
வன்னிய குலத்தோர் .....................பாடல்21
இங்கிருக்கும் வன்னியர் சாதி ...பாடல்50
வன்னியமார்கள் அனைவரும் கூடி. பாடல்51
🔴தேசத்தில் உள்ள வன்னியரும், கள்ளர்,வில்லிகள், பட்டர்கள் .hijira inscription கிபி 1580
🔴பாண்டிய மன்னனின் பெரும் படையினராக வன்னிய வட்டம், தெலுங்கர்,ஆரியர் ,கள்ளர் ,மறவர் (தெ.இ.கோ.சா 706)
🔴வன்னிய நாயக்கமாரில். கிபி 1379.(ஆவணம் இதழ் 18,page 65)
🔴வன்னிய நாயக்கர்கள் கோயிலுக்கு செய்த கொடை பற்றியது. கிபி 1379.(ஆவணம் இதழ் 12,page 7).அதாவது வன்னிய ஜாதியில் நாயக்கர் பட்டம் உடையவர்களை பற்றிய கல்வெட்டு
🔴இறைவனின் ஸ்ரீ பாதம் தாங்கும் உரிமையை வன்னியர்களுக்கு அரசன்அளித்ததை கூறும் கல்வெட்டு. கிபி 1382.(புதுச்சேரி மாநில கல்வெட்டுக்கள,page 353)
🔴வன்னியர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் ஜாதியில் ஏழு பேரை தேர்ந்தெடுத்து ஏழு நாட்டுக்கு தலைவர் ஆக்கினர். அந்த நாடே வன்னிய நாடு. ....யாழ்ப்பாண வைபவமாலை

Wednesday, December 11, 2024

வன்னிய குல க்ஷத்ரியா் தினம்" . ஜீன் 13

 வன்னிய குல க்ஷத்ரியா் தினம் இன்று.

 🛕🌳🔥🔥🔥🔥🔥🌳🛕

  ஜீன் 13 − "வன்னிய குல க்ஷத்ரியா் தினம்" .

 G.O.No.271, 13th June 1929 என்கின்ற அரசாணை வழங்கும்போது தமிழ்நாடும்ஆந்திர மாநிலமும் ஒருங்கிணைந்த மெட்ராஸ் அரசாக (Government of Madras) இருந்ததுமேற்படி அரசாணை வருவதற்க்கு முன்பு வரை சென்னை மாகானத்தின் ஒரு மாவட்டமான தமிழ்நாட்டில் வன்னிய குல க்ஷத்ரியர்கள் பள்ளி மற்றும் வன்னியர் என்றும் அழைக்கப்பட்டு வந்தார்கள்.

சென்னை மாகானத்தின் ஒரு மாவட்டமாக இருந்த ஆந்திராவில் அக்னி குல க்ஷத்ரியர்கள் பள்ளி மற்றும் வன்னியர் என்றும் அழைக்கப்பட்டு வந்தார்கள்.

தமிழ்நாட்டில் வாழ்ந்துவரும் வன்னியர் மட்டுமே "வன்னிய குல க்ஷத்ரியர்எனவும்ஆந்திராவில் வாழ்ந்துவரும் வன்னியர் "அக்னி குல க்ஷத்ரியர்எனவும் அரசு ஆணை எண் 271 நாள் 13.6.1929ல் மதராஸ் அரசு வெளியிட்டது.

தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் வன்னியரே க்ஷத்ரியர் எனவும்தென்னிந்திய இராஜபுத்திரர்கள் எனவும்தமிழ்நாட்டு க்ஷத்ரியர் எனவும்தமிழ்நாட்டு இராஜபுத்திரா்கள் எனவும் அழைக்கப்படும் வரலாற்று பெருமை உடைய ஒரே இனம் நம் வன்னியகுல க்ஷத்ரிய இனமாகும்.

 

தமிழ்நாட்டில்

"வன்னிய குல க்ஷத்ரியர்"

 ஆந்திராவில்

"அக்னி குல க்ஷத்ரியர்"

கேரளாவில்

சம்பு குல க்ஷத்ரியர்

கர்நாடகாவில்

திகளர் குல க்ஷத்ரியர்

என தென்னிந்தியா முழுவதும்பெருவாரியான மக்கள் தொகையுடன் வாழ்ந்து வரும் ஒரே இனம் அக்னியில் தோன்றிய நம் இனமாகும்.

கி.பி. 08.04.1888ல் இந்தியாவிலேயே முதல் முதலாக "வன்னிய குல க்ஷத்ரிய மஹா சங்கம்மதராஸ் பிரசிடென்சியில்வன்னிய குல க்ஷத்ரிய மஹா சங்கத்தின் தந்தை "வன்னி குலோத்தாரணர்மகான் ஸ்ரீ கா.கோபால் நாயக்கர் அவர்களால் துவக்கப்பட்டது.

வன்னியர்கள் (பள்ளிஎன்ற பெயரை "வன்னிய குல ஷத்ரியர்எனப் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்று ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்து நீதிமன்றம் மூலமாக வழக்கு தொடுத்தனர்.

வன்னியர்கள் "க்ஷத்ரியர் "என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி வெற்றியும் பெற்றார்கள்.

பின்பு நாங்களும் க்ஷத்ரியர்தான் என்று சில ஜாதிச் சங்க தலைவர்கள் நீதிமன்றத்தில் உரிமை கொண்டாடினர்போதிய ஆதாரம் இல்லாததால் இவர்களின் வழக்கை தள்ளுபடி செய்தது பிரிட்டிஷ் அரசு.

தென் இந்தியாவில் வன்னியர் மட்டுமே "க்ஷத்ரியர்என அரசாணை எண் 271/1929 கெசட்டிலும் வெளியிட்டனர்.

வன்னிய குல க்ஷத்ரியர்  என்ற நம் சாதி பெயரை பெறுவதற்கே 60 ஆண்டுகள் போராட வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டதை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும்.

நம் சமுதாயத்திற்கு "க்ஷத்ரியர்என்ற பட்டம் சாதரணமாக கிடைத்து விட வில்லை.

கிட்ட தட்ட பல ஆயிரம் காலமாக ஆண்ட பரம்பரையில் கல்விபொருளாதாரம்ஆட்சியில் உயர்ந்த நிலையில் இருந்து வந்த நாம் இடைப்பட்ட கால அந்நிய படையெடுப்புகளினாலும்நம் எதிரிகளின் சூழ்ச்சிகளினாலும் ஆட்சி அதிகாரத்தை இழந்தோம்,

நம் வரலாற்றையும்கல்வியையும் தொலைத்து 600 ஆண்டுகள் ஆகி அனைத்திலும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டோம்.

வன்னி நாடு பல மரபார் ஆட்சிக்கு உட்பட்டு கடைசியாக வந்த ஆங்கிலேயன் நம்மை கீழ் ஜாதி வரிசையில் 8 வது இடத்தில் " பள்ளி " என்று நம்மை இணைக்க பார்த்த போது நம் குல முன்னோர்கள் கொதித்து எழுந்தனர்.

நம் சமுதாய மக்கள் எங்களை "வன்னிய குல க்ஷத்ரியர் "என்றே குறிக்க வேண்டும் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரியிடம் முறையிட்டு நாடு முழுதும் போராட்டங்களும்ஆர்பாட்டங்களும் வெடிக்க செய்தனர்.

1872 ஆம் ஆண்டு குன்னம் முனுசாமி பிள்ளை அவர்களது "ஜாதி சங்கிரச்சாரம்என்ற நூலில் வன்னியர்களை பற்றி விரிவாக சான்றுகளுடன் விளக்கப்பட்டு இருந்தன.

காஞ்சிபுரம் ஆறுமுக நாயகர் 1907 இல் " சாதி கண்ணாடி " என்று பொருள் படும் " வருண தருப்பணம் " எனும் நூலை வெளியிட்டார்.

குன்னம் முனுசாமி பிள்ளை அவர்கள் வன்னிய குல க்ஷத்ரிய மகா சங்கத்தின் ஆய்வாளராக செயல்பட்டார்.

மஹா சங்க பிரதேச காரியதரிசியாக இருந்த அய்யா காஅண்ணாசாமி நாயகர் அவர்களைக் கொண்டு " வன்னிய குல விளக்கம் " என்ற அறியதோர் ஆராய்ச்சி நூலை எழுதி அய்யா கா.கோபால் நாயக்கர் அவர்கள் சொந்த செலவில் அச்சிட்டு வெளியிட்டார்.

 

அக்காலத்தில் மஹா சங்க உள்ளூர் காரியதரிசியாயிருந்தவரும் அரசாங்க கல்விச்சாலை மேற்பார்வையாளருமான அய்யா அய்யாகண்ணு நாயக்கர் B.A. அவர்களைக் கொண்டு தமிழில் அச்சிட்டு வெளியிட்ட வன்னி குல விளக்கத்தை ஆங்கிலத்தில் எழுதும்படி செய்து அதையும் தன் சொந்த செலவில் அச்சிட்டு எல்லா கலெக்டர்களுக்கும்அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கும் அனுப்பி நமது மரபை வன்னிய குல க்ஷத்ரியர் என்பதை அய்யா கா.கோபால் நாயக்கர் நிலைநாட்டி சென்றார்.

அந்த ஆங்கில புத்தகத்தை கோதாவரி ஜில்லா கோரிங்கா அக்னி குல க்ஷத்ரிய சங்க தலைவர் அய்யா திருவாளர்இலட்சுமணசாமி வர்மா அவர்கள் தெலுங்கில் மொழிபெயர்த்து அவர் சொந்த செலவில் அச்சிட்டு வடநாட்டில் பரவச்செய்தார்.

பல்வேறு இலக்கியங்களில் வன்னியர்களை பற்றிய குறிப்புகளும்கல்வெட்டு செய்திகளையும்வட மொழி சூத்திரங்களையும்தாமிர செப்பேடு செய்திகளையும்ஓலைச் சுவடிகளையும்சிலசாசனங்களையும்பல மாநிலங்களுக்கும்ஊர்களுக்கும் சென்று அலைந்து திரிந்து சேகரித்து மேற்கண்ட புத்தகமாக அச்சிட்டு இருந்தார்கள்.

சென்னை மாநில கல்லூரி சம்ஸ்கிருத பேராசிரியர்களை கொண்டு அவைகள் உண்மையானவையாஎன்று சான்றுகள் பெற்று இணைத்து இருந்தனர்.

மேற்கண்ட பல நூல்கள் வடிவில் சமர்பிக்கபட்ட சான்றுகளை சரி பார்த்த ஆங்கில அரசு இறுதியில் நமக்கு " வன்னிய குல க்ஷத்ரியர் " என்று ஜாதி பெயரை பயன்படுத்தலாம் என்று மேற்படி அரசாணை மூலம் அறிவித்தது.

வன்னியர் அல்லது பள்ளி என்போர் எல்லா ஆவணங்களிலும் வன்னிய குல க்ஷத்ரியர் " என்று குறிப்பிடலாம் என்று ஆங்கில அரசு அரசானை வெளியிட்டது.

தெலுங்கு பேசும் வன்னியர் அன்று சீமந்திரா பகுதி தமிழகத்துடன் இணைந்து இருந்த பகுதி அங்கு நம் மக்கள் அதிக அளவில் வசிகின்றனர்,

அவர்கள் தங்களை அக்னி குல க்ஷத்ரியர் என்கின்றனர்.

மேலும் கோலார்பெங்களுர்மைசூர்பகுதிகளில் வாழும் வன்னியர்கள் தங்களை "திகளர் " மற்றும் "சம்பு குல க்ஷத்ரியர்கள்என்கின்றனர்.

அரசாணை வெளியீடு 1929 ஆம் ஆண்டு ஜூன்13 சென்னை மாகான சட்டதுறை மூலம் அரசாணை எண் 271ல்,

 தமிழ்நாட்டில்

வன்னிய குல க்ஷத்ரியர் "     என்றும்,

 தெலுங்கு பேசும் ஆந்திரா பகுதியில்,

அக்னி குல க்ஷத்ரியர் "

என்றும் குறிபிடபடுவர் என்று அரசு அறிவித்தது.

வன்னியர்பள்ளி என்று இருந்த நம் ஜாதிப் பெயரை சுமார் 60 ஆண்டுகள் போராடி "வன்னியகுல க்ஷத்ரியர் " மற்றும் அக்னி குல க்ஷத்ரியர் என்று பெயர்களை பெற்று தந்தனர் நம் குல முன்னோர்கள்.

அன்று முதல் ஜாதிச் சான்றிதழ்களிலும்பத்திரங்களிலெல்லாம் நமது ஜாதிப்பெயரை வன்னிய குல க்ஷத்ரியர் என்று எழுத தொடங்கினார்கள்.

சரித்திர பெருமை மிக்க தென்னிந்திய ராஜபுத்திரர்களாகிய நமக்கு " வன்னிய குல க்ஷத்ரியர் " என அரசானை கிடைக்க பெரும் பாடுபட்ட நம் குல முன்னோர்கள் கீழ்வருமாறு.

1. வன்னிய குல க்ஷத்ரிய மஹா சங்கத்தின் தந்தை "வன்னி குலோத்தாரணர்அய்யா ஶ்ரீமான் கா.கோபால் நாயக்கர் அவர்கள்.

2. அக்னி குல க்ஷத்ரிய மஹா சங்கத்தின் தந்தை அய்யா P.லட்சுமண சுவாமி வர்மா அவர்கள்.

3. "வன்னிகுலோபகாரிஅய்யா புண்ணமை மு.தியாகராயர் நாயக்கர் அவர்கள்.

4. "ராவ் சாயப்அய்யா .செல்லப்ப நாயக்கர் அவர்கள்.

5. ராவ் பஹதூர் அய்யா ஆற்காடு .தனகோட்டி முதலியார்.

6. மகாநாடு அய்யா அரங்கநாத நாயக்கர் அவர்கள்.

7. மகாநாடு அய்யா .சிங்காரவேலு நாயக்கர் அவர்கள்.

8. "மஹா சங்க கேப்டன்"அய்யா தூசி.இராஜகோபால் பூபதி நாயக்கர் அவர்கள்.

9. "வன்னி குல போஷகர்அய்யா இரங்கூன் வெங்கடசாமி நாயக்கர் அவர்கள்.

10. அய்யா தி.அய்யாகண்ணு நாயக்கர் அவர்கள்.

11. அய்யா குன்னம் முனுசாமி பிள்ளை அவர்கள்.

12. " வன்னிய குல அறிஞர் " அய்யா கா.அண்ணாசாமி நாயக்கர் அவர்கள்.

13. " வன்னிய ரிஷி " அய்யா கா.ஆறுமுகம் நாயக்கர் அவர்கள்.

14. அக்னி குல க்ஷத்ரிய சங்கத்தின் பொது செயளாலர் அய்யா பிரம்மானந்த ராவ் வர்மா அவர்கள்.

15. அக்னி குல க்ஷத்ரிய சங்கத்தின் பொருளாளர் அய்யா பல்லவ கேசரி சத்திய ராஜீ அவர்கள்.

16. பாயக்காரிகளின் பாதுகாவலர் அய்யா அத்திபாக்கம் .வெங்கடாசலம் நாயக்கர் அவர்கள்.

17. வன்னிய குல க்ஷத்ரிய சமுதாய தந்தை "தேசிய கவிச்சிங்கம்" "இராஜரிஷிஅய்யா சு.அர்த்தநாரீச வர்மா நாயக்கர் அவர்கள்.

18. பல்லவ குலசேகரா் அய்யா கா.கோ.பலபத்திரா் நாயக்கர் அவர்கள்.

வன்னியர்பள்ளி என்றிருந்த நம் ஜாதிப்பெயரை வன்னிய குல க்ஷத்ரியர் என நமக்கு பெற்றுதந்த நம் முன்னோர்களை இன்று நாம் போற்றி வணங்குவதோடுநம் முன்னோர்கள் போல நாமும் நம் குல மக்களுக்கு குலப்பணியும்நன்மையும் செய்வோம்தர்மமும் செய்வோமாக.

அவர்களைப் போல் நாமும் வாழ்ந்து காட்டுவோம்.

ஓம் நமசிவாய நமஹ

🛕🛕🌳🌳🔥🙏🏻🔥🌳🌳🛕🛕

 அன்புடன்

 மஹாரிஷி ஜம்பு ஆன்மீக மஹா சபா.

 தொண்டை மண்டலம்.