Sunday, September 16, 2012

சித்தாண்டபுரம் செப்பேடு


சித்தாண்டபுரம் செப்பேடு

நமது இனம் ஒரு போர்க்குடி என்பதை நீங்கள் அறிவீர்கள்.இன்று உள்ள நமது சமுதாய நிலையும் அறிந்ததே. ஆனால் தமிழரசர் ஆட்சி வீழ்ந்த பிறகும் நமது மக்கள் எத்தகையோராய் இருந்தனர் என்பதற்கு ஆதாரமாக ஒரு செப்பேட்டினை பற்றி இங்கு கூறுகிறேன்."சித்தாண்டபுரம் செப்பேடு" எனக் குறிப்பிடப்படும் இச் செப்பேட்டைப் பற்றி விரிவாக விளக்கம் கொடுத்தவர் நமது இன சரித்திர ஆசிரியர் "கல்வெட்டுச் செம்மல்" திரு.நடன்.காசிநாதன் அவர்கள்.

வன்னிய கவுண்டர்களின் வீரத்தையும்,துணிவையும் இச்செப்பேடு உணர்த்துகிறது.இதில் உள்ள சில சுவையான சில பகுதிகள் உங்கள் பார்வைக்கு:

"
சிறுதலை பூண்டியிலிருந்து ஒலகளந்த கவுண்டனும் யேகாம்பிறி கவண்டனும் ரண்டு பேரும் மேர்க்கே யேரி வறச்சே சிங்கிரி பட்டி கணவாயிலே நூரு வேடராகிறவர்கள் வந்து மறிச்சிக் கொண்டபோது ஒலகளந்தா கவுண்டனும் யேகாம்பிரி கவுண்டனும் இவர்கள் ரண்டு பேரும் அவர்கள் மேல் சண்டைகள் செய்து அவர்களில் நாலு பேரை வெட்டித் துறத்திவிட்டு அப்போ ஆலம்பாடி வந்து சேந்து அந்தக் கோட்டையில் வீட கட்டிக்கொண்டு நிலையாயிறுந்தார்கள்.அப்போ ஆலம்பாடி கோட்டையிலிறுக்கப்பட்ட யிறுப்பாளிநாயக்கன் நீங்களாரென்று கேட்டான் நாங்கள் படையாச்சிகளென்று சொன்னார்கள் ஆனால் நம்பள் பக்கத்திலெ யிறுங்கோளென்று சேத்திக்கொண்டான்"

மற்றொரு பகுதி:

"
உலகளந்தா கவண்டனும் ஏகம்பிரி கவண்டனும் ஆலம்பாடி நாட்டையாண்டு கொண்டிருக்கும் காலத்தில் பெரியப்ப நாயக்கன்,சின்னப்ப நாயக்கன்,பாலப்ப நாய்க்கன் இவர்கள் வந்து என்களுக்கு வர்த்தனை உங்கள் வீட்டுக்கு ரண்டு பணம் குடுக்கவேண்டுமென்று கேட்டார்கள்.அதுக்கவர்கள் நாங்கள் குடுக்குறதில்லை யென்றார்கள்.நாங்கள் விடுகுறதில்லை என்றார்கள் இவர்கள்.ஆடு மாட்டை கொள்ளை ஓட்டினார்கள் அவர்களில் பத்து வேடரை வெட்டிக் கொள்ளையே திருப்பிக்கொண்டார்கள்.
செகதேவராயரண்டை போனார்கள்.பாலப்ப நாயக்கன் எங்கள் வர்த்தனையைக் கேட்டோம் என்று சொன்னான்.ஏகாம்பிரி கவுண்டன் நாங்கள் வன்னிய வம்ஷம் அப்படி கொடோமென்றோம்.எங்கள் ஆடுமாடெல்லம் கொள்ளையிட்டார்கள் நாங்கள் அவர்களை பத்துப்பேரை வெட்டி கொள்ளையை திறுப்பிக்கொண்டோமென்றான்.

செகதேவராயர் வேடர் கையில் 100 பொன் அபுறாதமாக வாங்கிக்கொண்டு நீங்கள் சவுரியவான்களென்று மெச்சி உங்களுக்கு கென்னா வெகுமானம் வேணுமென்றார் அப்போது ஏகாம்பிரி கவுண்டனெங்களுக்கின்ன சாதி அதிகாரம் வேணுமென்று கேட்டார்கள்"


விளக்கம்: சிறுதலைப்பூண்டி என்ர இடத்திலிருந்து உலகளந்தா கவுண்டர், ஏகாம்பர கவுண்டர் என்ற வன்னியர் இருவர் மேற்கு நோக்கி செல்கையில் அவர்களை ஒரு கணவாயினருகே நூறு வேடர்கள் வழி மறிக்கின்றனர்.ஆனால் இவ்விருவரும் அவ்வேடரோடு போரிட்டு அவர்களில் நான்கு பேரைக் கொன்றனர்.இதனைக் கண்ட அந்த வேடர் கூட்டம் சிதறி ஓடிவிட்டது.இதன் பிறகு இந்த வன்னிய கவுண்டர் இருவரும் ஆலம்பாடி எனும் ஊரில் குடியமர்ந்தனர்.

ஆலம்பாடி பகுதியை அப்போது ஆட்சி செய்த (தெலுங்கு) இறுப்பாளி நாயக்கன் என்பவன் இவர்களை பற்றிக் கேள்விப்பட்டு இவர்களிடம் யாரென்று கேட்டபோது தாங்கள் படையாட்சிகள் என்று அந்த இரு வன்னியரும் கூறினர்.நீங்கள் எங்களுக்கு உறுதுணையாயிருங்கள் என்று அவர்களை இறுப்பாளீ நாய்க்கன் சேர்த்துக்கொண்டான்.

ஆலம்பாடி நாட்டில் உலகளந்தா கவுண்டன்,ஏகாம்பர கவுண்டன் இருவரும் தலைவர்கள் என்ற நிலையில் வலுவுடன் இருந்தபோது (தெலுங்கு) நாயக்கராட்சியின் பிரதிநிதிகளான பெரியப்ப,சின்னப்ப,பாலப்ப நாய்க்கன்கள் இவர்களிடம் வரி கேட்டனர்.கொடுக்கமாட்டோம் என்று மறுத்தனர் வன்னியர்கள்.

வரி கொடுக்க மறுத்ததால் நாய்க்கர் தமது ஆட்களுடன் வன்னியருடைய ஆடு.மாடுகளை ஓட்டிச் செல்லத் தொடங்கினர்.சினமுற்ற வன்னியர் நாய்க்கர் ஆட்களோடு போர் செய்து அவர்களில் பத்து பேரை வெட்டிக்கொன்று தமது ஆடு மாடுகளை மீட்டுக்கொண்டனர்.

இரு தரப்பினரும் பெருமன்னனான செகதேவராயரிடம் சென்று முறையிட்டனர்.பாலப்ப நாய்க்கர் தரப்பினர் இவர்கள் வரி கொடுக்கவில்லை என்றனர்.ஏகாம்பர கவுண்டர் நாங்கள் வன்னியர் குலம் என்பதால் வரி கொடுக்க மறுத்தோம்.எங்கள் ஆடு,மாடுகளை கவர்ந்து செல்ல முயன்றதால் அவர்கள் ஆட்கள் பத்து பேரை வெட்டிக்கொன்றோம் என்றனர்.வழக்கை விசாரித்த செகதேவராயர் பாலப்ப நாய்க்கர் தரப்பிற்கு நூறு பொன் அபராதம் விதித்து பின்னர் ஏகாம்பர கவுண்டர் தரப்பை பாராட்டி உங்களுக்கு என்ன சன்மானம் வேண்டும் என்று வினவ அதற்கு அவர்கள் எங்களுக்கு எங்கள் இன ஜாதி தலைமைப் பொறுப்பு வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.


நண்பர்களே இந்த செப்பேட்டில் ஏகாம்பர கவுண்டர் உள்ளிட்ட பல வன்னிய கவுண்டர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.மேலும் அதில் உள்ள மற்றொரு முக்கிய செய்தி:

ஒரு தேரோட்டத்தின்போது வன்னியர் தங்கள் விருதுகளைப் பயன்படுத்தக்கூடாது என்று வலங்கை ஜாதிகளைச் சேர்ந்தோர் மறித்து பிரச்சினை செய்ய வன்னிய கவுண்டர்கள் தம்மைத் தடுத்த வலங்கை ஜாதியாரை அடித்து துரத்தி தேரோட்டத்தை நடத்தினர்.
Posted by : R. SAKTHIVEL - 9841787137
mail: monoindiadotcom@gmail.com

ஷத்திரியர்கள்


ஷத்திரியர்கள்

வன்னியப் பெருங்குடி மக்கள் தான் தமிழ்நாட்டில் ஷத்திரியர்கள். எத்தனையே வகுப்பினர் முட்டி மோதிப் பார்த்த போதிலும், வன்னியர்கள் மட்டுமே ஷத்திரியர்கள் என்று ஆங்கிலேயர்களே அங்கீகரித்து விட்டனர். அறிவிக்கையும் அமலில் உள்ளது. தமிழகத்தில் வன்னியர்களைத் தவிர வேறு யாருக்கும் ஷத்திரியப்பட்டம் சொந்தமில்லை.
இவற்றுக்கு ஆதாரங்கள் எண்ணற்றவை.

விஜயதசமியின் போது வன்னியர்கள் ஆயுத பூஜை செய்வதில்லை என்று சொன்னது யார்...? உங்களுக்கு தெரியுமோ என்னவோ...? வன்னியர்களுக்கு உள்ள பட்டங்களில் ஒன்று வில்வித்தையனார் என்பது. வில் வித்தைகளுக்கு அதிபதி என்று அதற்குப் பொருள். இந்த வில்வித்தையை வன்னியர்கள் கற்கத் தொடங்குவதே விஜயதசமி அன்று தான். இது வெறும் கூற்று அல்ல. வரலாற்று பதிவுகள் ஏராளமானவை உண்டு.

வன்னியர்களான மாயவரம் பாளையக்காரர்களுக்கு உள்ள ஒரு பட்டம், ராவுத்தமின்ட நைனார் என்பது. அதாவது, அவர்கள் குதிரைப் படைகளுக்கு பொறுப்பாளர்கள். குதிரை ஏறி ஆயுதம் பிடித்து எதிரிகளின் கொட்டத்தை அடக்கியவர்கள். அதுமட்டுமல்ல... கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், வழி வழியாக வரும் கிராமப்புற கதைகளில், அடக்க முடியாத முரட்டுக் குதிரைகள் பலவற்றை வன்னியர்கள் மட்டுமே அடக்கியதை எடுத்துக் கூறுவார்கள். கிராமியக் கதைகள் தான் வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு முக்கியமான களம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை...

நான் வகைப் படைகளை ரத, கஜ, துரத, பதாதி என்று பிரிப்பார்கள். இவை நான்கும் சேர்த்துதான் படை. படையாட்சி என்பது வெறும் காலாட்படை அல்ல. ரதம், யானை, குதிரை போன்றவற்றையும் சேர்த்தது தான். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், வன்னியர்களின் ஒரு பிரிவினருக்கு குல தெய்வம் மதுரை வீரன். குதிரையில் ஏறி கம்பீரமாக அமர்ந்து இருப்பான் மதுரை வீரன்.

மதுரை வீரன் என்றதும் மதுரைக் காரர் என்று நினைத்து விடக் கூடாது. நம்முடைய பகுதியில் இருந்து மதுரைக்கு சென்று போர் புரிந்தவர்.

பட்டங்களையும் முத்திரைகளையும் பாதுகாக்கும் சாதிப் பிள்ளைகளை கேட்டால் சொல்வார்கள்... வன்னியர்களின் வாகனம், குதிரை. அதிலும் ஆண் குதிரை. வன்னியர்களின் காவல் மிருகம், ஆண் நாய். திருண்ணாமலை மாவட்டத்திற்கு முன்பு இருந்த பெயர், சம்புவராயர் மாவட்டம் என்பது. சம்பு + அரயர் = சம்புவராயர். அந்த பகுதியை ஆண்ட வன்னிய அரசர்கள் அவர்கள்.

இன்னும் வன்னியர்கள் தான் ஷத்திரியர்கள் என்று சொல்வதற்கு கலிங்கத்துப் பரணி, கல்நாடம், சிலையெழுது போன்ற ஏகப்படட நூல்கள் உள்ளன. பின்னர் வந்த பாளையக்காரர்கள் பலர் நம்மவர்கள் தான் என்பதை வன்னியர் சிலையெழுபது என்ற வழி நூலும் பளிச்சென்று சொல்லும், வன்னியர்கள் தான் ஷத்திரியர்கள் என்பதை.

சோழ மன்னர்கள் வன்னியர்கள் என்று சொல்வதற்கு வரலாற்று ஆதாரமாய் வாழ்கிறார்கள், பிச்சாவரத்து பாளையக்காரர்கள். சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒரு நடைமுறை வழக்கம் உண்டு. சோழ மன்னர்களுக்கு மட்டுமே அங்குள்ள மூலஸ்தானத்தின் பஞ்சாட்சரப் படிக்கட்டில் வைத்து, சிவ பெருமானுக்கு உள்ள அத்தனை அபிஷேக ஆராதனைகளையும் செய்து முடி சூட்டுவார்கள். இந்த வரலாற்று உண்மை, பெரிய புராணத்தில் காணப்படுகிறது. அதிலும், கூற்றுவ நாயனார் புராணம் இதைப் பற்றித் தான் பேசுகிறது. வேறு எந்த சாதிக்கும், பிரிவுக்கும் இந்த மரியாதை கிடைக்காது.

இந்த பஞ்சாட்சர படிக்கட்டில் வைத்து முடிசூட்டும் உரிமையை இந்த காலம் வரையில் பெற்ற ஒரே குடும்பம், பிச்சாவரத்து பாளைக்காரர்கள். இவர்கள் வன்னியர்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அவர்களைக் கேட்டால் கூட சொல்வார்கள். எனவே, வன்னியர்கள் தான் சோழர்கள் என்பதில் எந்த மாறுபாடும் இல்லை. எனவே, வன்னியர்கள் மன்னர்கள், ஆண்ட பரம்பரை, ஷத்திரியர்கள் என்பதில் உறவுகளுக்கு ஐயமே தேவையில்லை.

மற்றொன்று, உணவுப் பழக்கத்தை மையப்படுத்தி நம்முடைய கலாச்சாரத்தை தாழ்வு படுத்த முடியாது. உணவுப் பழக்கம் என்பது காலத்திற்கு ஏற்ப மாறுதல்களுக்கு உட்பட்டது. ரிக் வேதத்தில் பிராமணர்கள் மாட்டு இறைச்சியை எப்படி சாப்பிட வேண்டும் என்பதற்கு விரிவான விளக்கங்கள் உள்ளன. அது அந்தக் காலம். ஆனால், இன்று பிராமணர்கள் சிலர் பசுவதையை தடுக்க வேண்டும் என்று கோஷமிடுகிறார்கள்.

அசுவமேத யாகம் என்ற ஒன்றைப் பற்றியும் ரிக் வேதம் கூறுகிறது.

மன்னர்கள் நடத்தும் அந்த யாகத்தின் இறுதியில் அனைத்து தகுதிகளும் கொண்ட ஆண் குதிரை பலியிடப்படும். பின்னர் அதன் பாகங்கள் அரசனுக்கும், பின்னர் வேதங்களை சொல்லி யாகத்தை நடத்தி வைக்கும் பிராமணர்களுக்கு பகிர்ந்து தரப்படும். குதிரைக் கறி தின்ற பிராமணர்கள் இப்போது அதையே தான் சாப்பிடுகிறார்களா...?

மேலும், வன்னியர்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பன்றிக் கறி சாப்பிடுவதில்லை. அது சில பகுதிகளை மட்டுமே சார்ந்தது. அதோடு, காட்டில் சென்று பன்றியை வேட்டையாடுவது அத்தனை சாமான்யமானதில்லை. ஈட்டியை வைத்து தான் பன்றியை வேட்டையாடிப் பிடிப்பார்கள். பொருளாதார நிலையில் பின்தங்கி இருப்பதும் உணவு பழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. சமூக, பொருளாதார நிலவரத்தால் பன்றிக் கறியும் சாராயமும் ஒரு சிலருக்கு பழக்கமாகி இருக்கலாம். ஆனால், வன்னியர்கள் அத்தனைப் பேருமே அப்படி இருப்பதில்லை.

அதோடு, நம்முடைய பாரம்பரிய கலையான கூத்துகளில், மண்ணைக் காக்கும் போர்கள் பற்றிய கதைகள் தான் அதிகம். மாட்சிமைப் பொறுந்திய மன்னர்களாகவும், படையாட்சி செய்த தளபதிகளாகவும், எதிரிகளை பந்தாடும் படைகளாகவும் விளங்கியவர்கள் வன்னியர்கள் தான். நாங்கள் தான் தமிழ்நாட்டு ஷத்திரியர்கள்.

நம்மிடம் பெருமையாய் சொல்ல இன்னும் எத்தனையே இருக்கிறது.
Posted by : R. SAKTHIVEL - 9841787137
mail: monoindiadotcom@gmail.com

வன்னியர் தான் சோழர் என்பதற்க்கு வாழும் ஆதாரம்..


வன்னியர் தான் சோழர் என்பதற்க்கு வாழும் ஆதாரம்..யார் யாரோ தங்களை சோழர் வம்சம் என்று சொல்லி கொள்ளும்போது
உண்மையான சோழ வம்சத்தினர் வன்னியக்குல க்ஷத்ரியர்கள் தான் என்பதை நிரூபிக்க வாழும் ஆதாரம் பிச்சாவரம் மன்னர்...

தில்லை வாழ் அந்தணரால் முடி சூட்டப்படும் பேறு பெற்ற ஒரு குடும்பத்தினர் இன்றும் சிதம்பரம் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் சிதம்பரம் பகுதியில் ஆட்சியாளாராக விளங்கியவர்கள். நாயுடு (தெலுங்கு நாயக்கர்) காலத்தில் பாளையக்காரர்களாக பிச்சாவரம் பகுதியில் ஆட்சி செய்தவர்.இவர்கள் "சோழனார்" என்று அழைக்கப்பட்டனர்.

கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் பிச்சாவரம்(பித்தர்புரம் என்பதே சரி) பகுதியை ஆண்ட விட்டலராயச் சோழனார் இம்மரபினர் ஆவார்.இவரைக் குறித்த கல்வெட்டு சில ஆண்டுகளுக்கு முன் பிச்சாவரத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இம்மரபினர் முடி சூடிக்கொள்வதற்கு முன்பு அபிஷேகம் செய்யப்பெற்று தில்லை நடராசரின் திருநீற்றைப் பெற்று அங்குள்ல பஞ்சாக்கரப் படி மீதமர்ந்து பட்டம் புனைந்துகொண்டு தில்லையில் சிம்மாசனத்தில் அமர்ந்து நல்லறம் புரிந்தனர். இந்தச் செய்தி திருக்கை வளம் என்ற நூலில் காணப் பெறுகிறது.

இந்நூலை இயற்றியவர் கூடல் இருவாட்சிப் புலவர் என்பவர். இவர் அரியலூர் மன்னரான விஜயரங்க ஒப்பிலாத மழவராயர் அரசவையில் இதனைப் பாடினார்.

இவ்வாறு பாடப்பெற்ற இம்மரபினர் சோழனார் என்றும் தில்லைச் சோழர் என்றும் அழைக்கப்பட்டனர்.

இம்மரபினரில் ஒருவர் பெயர் : புலிக்குத்திப் புலிவாயில் பொன்னூஞ்சல் ஆடிய வீரப்ப சூரப்பச் சோழனார்.

தில்லை வாழ் அந்தணர் முடியெடுத்துக் கொடுக்க சைவ வேளாளர் ஒருவர் இம்மரபினருக்கு முடிசூட்டுவார்.இவ்வாறு பிச்சாவரம் சோழனாருக்கு முடி சூட்டும் வேளாளர் சோழ மன்னர்களின் அமைச்சராக இருந்தவரின் வழி வந்தோர் எனக் கூறுவர்.

இந்த சோழனார் மரபில் கி.பி 1844 -இல் இரத்தினசாமி சூரப்ப சோழனார் பிறகு இராமபத்திர சூரப்ப சோழனார், கி.பி. 1911 -இல் தில்லைக்கண்ணு சூரப்ப சோழனார், 1943 - இல் ஆண்டியப்ப சூரப்ப சோழனார், பின்பு 1978 - இல் சிதம்பரநாத சூரப்ப சோழனார் முதலானோர் நடராசர் திருமுன் பட்டம் புனைந்திருக்கிறார்கள்.
பிச்சாவரம் குறுநில மன்னர் ஸ்ரீ ஆண்டியப்ப சூரப்ப சோழனார் திருமணம் சிதம்பரத்தில் நடைபெற்றதையும், இம்மன்னருக்குத் தில்லைக் கோயில் மரியாதைகளுடன் சங்காபிஷேகமும், பட்டாபிஷேகமும் நடைபெற்றதையும் 24/ 8 /1943 - இல் வெளிவந்த ஆங்கில நாளேடு இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்த மன்னர் 19/8/1943 - இல் முடி சூடித் திருமணம் செய்துகொண்டதைப் பாராட்டுவதற்காக சிதம்பரத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது.இந்தச் செய்தி 16/10/1943 - இல் வெளிவந்த சுதேசமித்திரன் என்ற இதழில் வெளியாகியுள்ளது.

தில்லையில் நடராசர் திருமுன் முடி சூடும் உரிமை சோழர்க்குரியது. வேறு எந்த அரச மரபினரும் இந்த உரிமையைப் பெற்றிருக்கவில்லை என்பது தேற்றம். சோழர்க்கு அன்றி வேறு யாருக்கும் முடி சூட மாட்டார்கள் தில்லை வாழ் அந்தணர்கள் என்பது அனைவரும் அறிந்தது.

எத்தனையோ பாளையங்கள் இருந்தும் அத்தகைய உரிமையை பிச்சாவரம் பாளையக்காரர்களான சோழனார்கள் மட்டும்தான் பெற்றிருந்தனர். இவர்கள் சோழர் பரம்பரை என்பதால் இந்த முடி சூடும் உரிமை பெற்றிருந்தனர்.

பிச்சாவரம் பாளையக்காரர்களான சோழனார்கள் வன்னிய குலத்தினர் ஆவர். இவர்கள் இப்போதும் அந்த பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.
சோழ சாம்ராஜியம் முடிந்ததும் அவர்களின் வாரிசுகள் எந்த சாதியில் கலந்தார்கள் என்பது தில்லை வாழ் அந்தணர்களுக்கு தெரியும். எனவே தான் அவர்கள் இவர்களுக்கு முடி சூட்டி இருக்கிறார்கள்.
Posted by : R. SAKTHIVEL - 9841787137
mail: monoindiadotcom@gmail.com

சோழர்கள் வன்னியரே..............


சோழர்கள் வன்னியரே..............

***லீய்டன் சிறிய செப்பேடு****

முதலாம் குலோத்துங்க சோழன், மேற்கண்ட பௌத்தபள்ளிக்கு அளிக்கப்பட்ட  தானத்தை அவன்காலத்தில் உறுதிசெய்யவும் மேலும் விரிவாக்கிய தானத்தை   அளிக்கவும் அக்காலத்திருந்த மேற்படி கிடாரத்தைரயனின் தூதன் ராஜவித்யாதர ஸ்ரீசாமந்தனும் அபிமானதுங்க ஸ்ரீசாமந்தனும் விண்ணப்பித்தபடி, மன்னன்  தன் இருபதாவது ஆண்டில் தன் ஆயிரத்தளியான ஆகவமல்ல குலகாலபுரத்து கோயில் (அரசன் இல்லம்) உள்ளால் திருமஞ்சன சாலையில் பள்ளிபீடம் 'காலிங்கராய'னில் எழுந்தருளி இருந்தேபாது சோழகுலவல்லி பட்டினத்து
(நாகப்பட்டினம்) இராஜராஜ "பெரும்பள்ளி" (மேற்படி விகாரம்) மற்றும்
இராஜேந்திர "பெரும்பள்ளிக்கு" (இவர் காலத்து இராஜேந்திர சோழன் பெயரிலும் வேறு விரிவுற்றது போலும்) அளித்திட்டைத விவரிக்கும் ஆவணமாகும்.தற்காலம் ஐேராப்பாவில் லீய்டன் (deg.52-10' N; 4-30' E - நெதர்லாந்து)  நகரத்து காப்பகத்தில் இருப்பதால் இவை 'லீய்டன் செப்பேடுகள்' என குறிக்கப்படுகின்றன.

*******பள்ளி என்பது நம் இனத்தை குறிப்பதாகும்..*****
இப்படிக்கு,
வீரராஜ் படையாச்சி..
Posted by : R. SAKTHIVEL - 9841787137
mail: monoindiadotcom@gmail.com

தென் தமிழ்நாட்டில் வன்னியர்கள்....


தென் தமிழ்நாட்டில் வன்னியர்கள்....

தென் தமிழகத்தில் வன்னியர் உண்டு.அவர்களுக்கும் வரலாற்று சிறப்புக்கள் உண்டு.பாண்டிய நாட்டுப் பகுதிகளில் ஆட்சியாளர்களாய் இருந்துள்ளனர். இந்த வன்னிய ஆட்சியாளர்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. இவர்கள் பாண்டிய மன்னனின் ஆசனத்துக்கு சரி சமமான ஆசனத்தில் அமரும் தகுதியும் உரிமையும் பெற்றவர்கள்.

இந்த ஆட்சியாளர்களே பிற்காலத்தில் ஏழாயிரம் பண்ணை,சிவகிரி,அளகாபுரி பாளையக்காரர்களாக விளங்கியவர்கள்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வில்லிபுத்தூர் கோவில் அறங்காவலர்களாக நியமிக்கப்பட சிவகிரி பாண்டியர் வன்னியரே.

விருதுநகர் மாவட்டம்,ராஜபாளையம் வட்டத்தைச் சேர்ந்த சமுசிகாபுரம் ஓர் ஜமீனாக விளங்கியது.இதனை ஆண்ட ஜமீந்தார்களுள் சிறந்தவராகக் கருதப்படுபவர் திரு.கருப்ப வன்னியனார் ஆவார்.

இவரது தந்தை திரு.சங்கரபாண்டிய வன்னியனார் ஆவார்.இந்த ஜமீனின் முதல் ஆட்சியாளர் இவர்தான்.

கருப்ப வன்னியனார் தமது ஜமீனின் மக்களுக்காக பல நற்பணிகளைச் செய்துள்ளார்.

"
ஏழு குளம் ஆண்ட எஜமான்" என்று மக்களால் அழைக்கப்பெற்றவர். இன்றும் இவர் வழி வந்தோரை அவ்வூர்(சமுசிகாபுரம்) மக்கள் "எஜமான்" என்றும் "சாமி" என்றும் "மகராஜா" என்றும் "பாண்டியன்" என்றும் அழைக்கின்றனர்.

பெரிய கருப்ப வன்னியனாருக்கு "மாப்பிள்ளைத்துரை" என்ற பட்டமும் உண்டு.இவர் தமது தந்தை,தாய் பெயரில் இரண்டு ஊர்களை உருவாக்கினார்."சங்கரபாண்டியபுரம்", "கோதை நாச்சியார்புரம்" என்ற இரண்டு ஊர்களும் இன்றும் உள்ளன. கருப்ப வன்னியனாரின் தந்தை திரு.சங்கரபாண்டிய வன்னியனார் பெயரையும், அவர் தாயார் திருமதி.கோதை நாச்சியார் பெயரையும் அவ்வூர்கள் தாங்கி நிற்கின்றன.

வரலாறு சொல்லும் நாம் யார் என்பதை.நமக்கு விளம்பரங்கள் தேவையில்லை.

தென் தமிழ் நாட்டில் வன்னியர் இல்லை என சில வேற்று ஜாதியினர் கூறுவது அவர்கள் அறியாமையையே காட்டுகிறது.
Posted by : R. SAKTHIVEL - 9841787137
mail: monoindiadotcom@gmail.com

வன்னியக்குல க்ஷத்ரியர் பட்ட பெயர்கள்


வன்னியக்குல க்ஷத்ரியர்களுக்குரிய பட்ட பெயர்களில் சில :
1.அதியமான் 2.ஆறுமறையார் 3.அன்பனார். 4.அண்னலங்காரர் 5.ஆண்டுகொண்டார் 6.அஞ்சாத சிங்கம் 7.பள்ளி 8.படையாண்டவர் 9.துரைகள் 10.ஜெயப்புலியார் 11.புலிக்குத்தியார் 12.முனையரையர் 13.முத்தரையர் 14.மானங்காத்தார் 15.வாணத்தரையர் 16.தேவர் 17.தொண்டைமான் 18.தொண்டாம்புரியார் 19.ஞானியார் 20.பிடாரியார் 21.சேத்தியார் 22.வாண்டையார் 23.முதன்மையார் (முதலியார்)24.நன்மையார் 25.வணங்காமுடியார் 26.நாயகர்(நாயக்கர்) 27.காலாட்கள் தோழ உடையார் 28.பிள்ளை 29.ரெட்டியார் 30.கவுண்டர் 31.கண்டர் 32.வீரமிண்டர் 33.வன்னியனார் 34.ரெட்டைக்குடையார் 35.சேரனார் 36.சோழனார்(சோழங்கனார்) 37.சோழகங்கர் 38.வல்லவர் 39.அரசுப்பள்ளி 40.பாண்டியனார்
41.
பரமேஸ்வர வன்னியனார் 42.நயினார் 43.நாட்டார்(நாட்டாமைக்காரர்) 44.பல்லவராயர் 45.காடவராயர் 46.கச்சிராயர் 47.சம்புவராயர் 48.காளிங்கராயர் 49.சேதுராயர் 50.தஞ்சிராயர் 51.வடுகநாதர் 52.பாளையத்தார்(பாளையக்காரர்) 53.சுவாமி 54.செம்பியன் 55.உடையார் 56.நரங்கிய தேவர் 57.கண்டியதேவர் 58.சாமர்த்தியர் 59.சாளுக்கியர் 60.சாமந்தர் 61.பல்லவர் 62.பண்டாரத்தார் 63.தந்திரியார் 64.ராஜாளியார் 65.கங்கண உடையார் 66.மழவராயர் 67.மழவர் 68.பொறையர்(புரையர்) 69.பூபதி 70.பூமிக்குடையார் 71.ராயர் 72.வர்மா 73.படையாட்சி 74.காசிராயர் 75.ராய ராவுத்த மிண்டார் 76.மூப்பனார் 77.வள்ளை(வள்ளல் என்பதன் மரூஉ) 78.பின்னடையார் 79.சேனைக்கஞ்சார் 80.பரிக்குட்டியார் 81.சேர்வை 82.கொங்குராயர் 83.கட்டிய நயினார். 84.கிடாரங்கார்த்தவர் 85.சமுட்டியர் 86.ஷத்திரியக்கொண்டார் 87.மருங்குப்பிரியர் 88.பண்ணாட்டார் 89.கருப்புடையார் 90.நீலாங்கரையார் 91.கடந்தையார் 92.வில்லவர் 93.கொம்பாடியார் 94.தென்னவராயர் 95.வண்ணமுடையார். 96.செட்டியார்,97. மேஸ்திரி, 98.வேளிர், 99.தேசிகர், 100.நரசிங்க தேவர், 101.காடுவெட்டியார்,102.உருத்திரனார்,103.,வானதிராயர்,104.செங்கழுநீரர்,105.ஆணை கட்டின பல்லவராயர் .....இன்னும் பல நூறு பட்ட பெயர்கள் உண்டு...
Posted by : R. SAKTHIVEL - 9841787137
mail: monoindiadotcom@gmail.com

வன்னிய குல க்ஷத்ரியர்கள் ஆட்சி


வன்னிய குல க்ஷத்ரியர்கள் ஆட்சி செய்த சில பாளையங்களும் அவர்களின் பட்டங்களும்.:

1. பிச்சாவரம் - புலிக்குத்தி புலிவாயில் பொன்ணூஞ்சலாடிய வீரப்ப சூராப்ப சோழனார்.
2. முகாசா பரூர் - கச்சிராவ் (கச்சிராயர்)
3. அரியலூர் மழவராயர்
4. உடையார் பாளையம் - காலாட்கள் தோழ உடையார்.
5. ஊத்தங்ககால் - பரமேஷ்வர வன்னிய நயினார்.
6. கீழூர் - பாஷா நயினார்
7. செஞ்சி - வாண்டையார், முதன்மையார்(முதலியார்)
8. காட்டகரம் - கெடியரசு பெற்ற கெங்கையாதிபதி சென்னாமலை கண்டியத் தேவர்.
9. விளந்தை வாண்டையார், கச்சிராயர்
10. பெண்ணாடாம் கடந்தையார்
11. குன்ணத்தூர் மழவராயர்
12. ஈச்சம் பூண்டி - கண்டியத் தேவர்.
13. பிராஞ்ச்சேரி - நயினார்
14. தத்துவாஞ்ச்சேரி சேதுபதி
15. நெடும்பூர் வண்ணமுடையார்
16. கடம்பூர் உடையார்
17.ஓமாம்புலியூர் வண்ணமுடையார்
18. குண வாசல் வண்ணமுடையார், உடையார்
19. மோவூர் - ராய ராவுத்த மிண்ட நயினார்.
20. நந்திமங்கலம் பூலாமேடு மழவராயர்
21. கிளாங்காடு - சேதுவராயர்
22. கல்லை நயினார்
23. நயினார் குப்பம் - காங்கேய நயினார்
24. திருக்கணங்கூர் - கச்சிராயர்
25. தியாகவல்லி நடுத்திட்டு கச்சிராயர்
26. ஆடூர் - நயினார்
27. மேட்டுப் பாளையம் ( சுண்ணாம்பு குழி) பல்லவராயர்
28. சோழங்குணம் முதன்மையார்
29. வடக்குத்து - சமஷ்டியார்
30. வடகால் - ராய ரவுத்த மிண்ட நயினார்
31. ஓலையாம்புதூர் - வண்ணமுடையார், கச்சிராயர்
32. மயிலாடுதுறை - அஞ்சாத சிங்கம்
33.முடிகொண்ட நல்லூர் உடையார்
34. கடலங்குடி - ஆண்டியப்ப உடையார்
35. வடுவங்குடி - ஆண்டியப்ப உடையார்
36. குறிச்சி - உடையார்
37. செல்லப்பன் பேட்டை சோழனார்
38. சோத்தமங்கலம் - வாண்டையார்
39. கோடாங்க்குடி சம்புவராயர்
40. சென்னிய நல்லூர் - சம்புவராயர்
41. கீழ்அணைக்கரை - வாண்டையார், உடையார்
42. இடைமணல் நயினார்
43. சுவாமிமலை தொண்டைமான்
44. சிவகிரி - பாண்டிய வன்னியனார்
45. அளகாபுரி ரெட்டைக்குடையார்
46. ஏழாயிரம் பண்ணை - ஆண்டுக் கொண்டார்
47. விடால் நாயக்கர்
48. பன்ணீராயிரம் பண்ணை - கட்டிய நயினார்
49. கருப்பூர் - படையாட்சியார்
50. கார்க்குடி படையாட்சியார்

Posted by : R. SAKTHIVEL - 9841787137
mail: monoindiadotcom@gmail.com

 

போதிதர்மன் ஒரு வன்னிய இளவரசன்


போதிதர்மன் என்ற பல்லவ இளவரசன்
போதி தருமன் என்பவர் 5ம் நூற்றாண்டை சார்ந்த ஒரு பௌத்த மத துறவி ஆவார். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ அரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது. புத்த மத குருவாக மாறியபிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மா அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.
குங்ஃபூவும் போதிதர்மனும்
போதி தருமன் ஷாலின் குங்ஃபூவை சீனத்துக்குக் கொண்டு சென்ற பல்லவ அரச குலத்தவர் என நிறுவுவோர் பின் வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர்.
1.கல்வெட்டு சான்று
சீனக்கோயிலில் (shoalin temple - kungfu school) உள்ள கல்வெட்டு, தென்னிந்திய புத்தத்துறவி போதிதர்மா உருவாக்கிய தற்காப்புக்கலையே குங்ஃபூ என்கிறது.
2.டான்லின் பதிவுகள் (Tánlín)
டான்லின் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவ பேரரசரின் மூன்றாம் மகன் என்கிறது.
3.டௌசுவான் பதிவுகள் Dàoxuān
டௌசுவான் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவன் என்கிறது.(南天竺婆羅門種 nán tiānzhú póluómén zhŏng).
4.பௌத்த காஞ்சி கோயில்
தற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்றுள்ளது.
5.ப்ராஃடன் கூறுவது
ப்ராஃடன் என்னும் ஆய்வாளர் போதிதர்மாவை காஞ்சியை தலைநகராகக்கொண்ட தமிழ்ப்பல்லவ பேரரசின் இளவரசர் என்கிறார்.
7.ப்ராஃடன் Yáng Xuànzhī பதிவை மறுப்பது. அக்காலச்சீனாவில் எந்த துறவி சீனா வந்தாலும் அவரை பெர்சியர் என்றெண்ணி விடுவதால், Yáng Xuànzhī (波斯國胡人 bō-sī guó hú rén) போதி தர்மாவை பெர்சியரெனக் கூரியதை மறுக்கிறார்.
8. தற்போது பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்பதை சீன சப்பானிய தற்காப்புக்கலை ஆசிரியர்கள் பார்த்துச்செல்கின்றனர்.
9 போதிதர்மா (பௌத்தவர்மப் பல்லவன்) கந்தவர்மன் IV-னின் மூன்றாம் மகனென அறியப்படுகிறது. அக்கால பல்லவ மரபினர் கடைமகனை புத்தமட தானம் அளித்துவிடுவர்.
கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்
1.நந்திவர்மன் I
2.குமாரவிஷ்ணு II
3.புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)
11. கால ஒற்றுமை
1. போதிதர்மாவின் காலமென பதிவுகள் கூறுவது (கி.பி.475-550)
2.விஷ்ணுகோபனின் காலத்திலிருந்து (கி.பி. 340) கந்தவர்மன் IV-ன் காலமாக அறியப்படுவது (கி.பி.450-500).
3.28 குருமார் வரிசையின் காலமாக கருதப்படுவது (சாக்கியமுனி முதல் (கி.மு.563) போதிதர்மா வரை (கி.பி.550). மேற்கூரிய காலங்கள் அனைத்தும் கூடி வருவது கால ஒற்றுமை.

சீனா கொண்டாடும் ஒரு வன்னிய இளவரசன்

சீனாவில் ஒரு தமிழனை அதுவும் ஒரு வன்னியனை கடவுளாக கொண்டாடுகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா. ஆம் அவர் தான் போதிதர்மா என்ற துறவி. போதிதர்மா பல்லவ நாட்டின் தலைநகரம் காஞ்சியில் முதலாம் கந்தவர்மன் என்ற அரசனுக்கு மூன்றாம் மகனாக பிறந்தார். அவர் இயற்பெயர் புத்தவர்ம பல்லவா. புத்த மதம் தழுவி சீனா சென்று நம் கலையான வர்மக்கலையை சீனர்களுக்கு குங்ஃபூ என்ற பெயரில் அறிமுகப்படுத்திய வன்னியர். அவரை சீன தேசமே தெய்வமாக கொண்டாடுகிறது. ஆனால் வன்னியர்களாகிய நாம் என்ன செய்தோம். அந்த சாதனை வன்னியனை மறந்துவிட்டோம். 
Posted by : R. SAKTHIVEL - 9841787137
mail: monoindiadotcom@gmail.com